பாகிஸ்தானில் தொடர் கனமழை: 8 பேர் பலி; 24 பேர் காயம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் நில சரிவால், குவெட்டா மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையின் பெருமளவிலான பகுதி பாதிக்கப்பட்டு உள்ளன.

Update: 2024-07-01 17:16 GMT

பலூசிஸ்தான்,

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதில், சிக்கி 8 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்து உள்ளனர். 300-க்கும் மேற்பட்ட மண் வீடுகள் சேதமடைந்து உள்ளன.

இதேபோன்று ஷெரானி மாவட்டத்தில் தனசார் மற்றும் தேரா இஸ்மாயில் கான் பகுதிகளுக்கு இடையே நில சரிவு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. குவெட்டா மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையின் பெருமளவிலான பகுதியும் நில சரிவால் பாதிக்கப்பட்டன.

பயணிகளுக்கான பஸ்கள், கார்கள் மற்றும் சரக்குகளை ஏற்றி சென்ற லாரிகள் ஆகியன இரு புறங்களிலும் வரிசையாக நின்றன. இதனை தொடர்ந்து உள்ளூர் அரசு நிர்வாகம் உடனடியாக அந்த பகுதிகளுக்கு சென்று பெரிய கற்கள் மற்றும் சேறுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்