வடக்கு பசிபிக் பெருங்கடலில் திடீர் நிலநடுக்கம்

இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2024-07-03 08:19 GMT

பெய்ஜிங்,

வடக்கு பசிபிக் பெருங்கடலில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 44.13 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 156.54 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்