வீடு மீது விமானம் மோதி விபத்து: 10 பேர் பலி

வீடு மீது விமானம் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-12-22 20:22 GMT

பிரேசிலா,

பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், சாலொ பாலோ மாகாணம் கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீடு மீது மோதியது.

இந்த கோர விபத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர். அதேவேளை, வீட்டில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்