தீபாவளியை முன்னிட்டு மனைவியுடன் நகைக்கடைக்கு சென்ற மத்திய பிரதேச முதல் மந்திரி

தீபாவளி கொண்டாட்டமாக தனது மனைவியுடன் நகைக்கடைக்கு சென்ற மத்திய பிரதேச முதல் மந்திரி வெள்ளிக்காசு வாங்கினார்.

Update: 2022-10-23 08:56 GMT

போபால்,

தீபாவளி கொண்டாட்டமாக தனது மனைவியுடன் நகைக்கடைக்கு சென்ற மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் வெள்ளிக்காசு வாங்கினார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி நகை மற்றும் ஆடைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் தீபாவளி கொண்டாட்டமாக நகை வாங்க நகைக்கடைக்கு முதல் மந்திரியே சென்றுள்ளார்.

போபாலில் உள்ள நகைக்கடைக்கு தனது மனைவியுடன் சென்ற முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், வெள்ளி காசு மற்றும் பூஜைப்பொருட்களை விலைபேசி வாங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்