காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் விழுந்து விபத்து: 3 வீரர்கள் பலி

பஸ் மலைப்பாதையில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2024-09-20 15:10 GMT

ஜம்மு,

காஷ்மீரின் பட்ஹாம் மாவட்டத்தில் உள்ள ப்ரெல் வாட்டர்ஹைல் மலைப்பாதையில் 52 பயணிகளுடன் பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 32 பேர் பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்புபடையினரும் இருந்தனர். இந்தநிலையில், மலைப்பாதையின் வளைவில் திரும்ப முயன்ற போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 40 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

இதி்ல்3 பி.எஸ்.எப். வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 33 பி.எஸ்.எப். வீரர்கள் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பி.எஸ்.எப் வீரர்கள் 35 பேர் 2-ம் கட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பஸ்சில் சென்றபோது இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்