மராட்டியம்: மருந்து தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் எம்ஐடிசி அம்பர்நாத்தின் ஆனந்த் நகரில் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் இரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அதிகாரி கூறுகையில்;
மருந்து தயாரிப்பு ஆலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு கிடைத்த தகவல் பெயரில் அம்பர்நாத், கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பத்லாபூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறினார்.