மத்திய பிரதேசம் : 3-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-01-12 17:24 IST

போபால்

மத்திய பிரதேசம் சத்தர்பூரைச் சேர்ந்தவர் இந்திரா குப்தா. அவருடைய மகள் தீக்சா(வயது 26) . இவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அருகில் உள்ள கல்லூரியில் இருதி ஆண்டு நுண்ணுயிரியலில் இளங்கலைப் பட்டம் படித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டின் 3வது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே தீக்சா பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்