ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீரர் பிரித்வி ராஜ்...டி.டி.வி. தினகரன் வாழ்த்து

தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்

Update: 2024-06-18 16:44 GMT

சென்னை,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஷாட் கன் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரது தலைமையில் ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ,ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீரர் பிரித்வி ராஜ்-க்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் அவர்களின் மகன் பிரித்விராஜ் தொண்டைமான் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தேர்வாகியிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்திருக்கும் பிரித்விராஜ் தொண்டைமான் அவர்கள், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்