அடிக்கடி தனிமையில் உல்லாசம்: திடீரென தொடர்பை துண்டித்த இளம்பெண்...ஆற்றுப்பகுதிக்கு வரச்சொன்ன கள்ளக்காதலன்....அடுத்து நடந்த விபரீதம்

இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

Update: 2024-06-26 15:55 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் மேல சக்குடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 31). டிரைவரான இவர் அடிக்கடி வெளியூர் பயணங்களுக்கு சென்று விடுவார். இவரது மனைவி ஜெயந்தி (24) கட்டிட சித்தாளாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற ஜெயந்தி மாயமானார். இதையடுத்து அவரது கணவர் ரவிசங்கர் தனது மனைவியை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினார். அனால் அவரைப் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை, பின்னர் அவர் இதுகுறித்து மதுரை சிலைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயந்தியை தீவிரமாக தேடிவந்தனர்.

மேலும் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் கணேசன், பயிற்சி இன்ஸ்பெக்டர் அஜித்குமார். தலைமைகாவலர்கள் வேலுச்சாமி, சிவா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் மதுரை வீரகனூர் அருகே வைகை ஆற்றுப்பகுதியில் எரிந்த நிலையில் சுமார் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் வைகை ஆற்றுப் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்தது ரவிசங்கரின் மனைவி வைஜெயந்தியின் உடல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வைஜெயந்தியின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். முதற் கட்ட விசாரணையில் வைஜெயந்தி கழுத்தை அறுத்து கொலை செய்யப் பட்ட நிலையில் உடல் அழுகியவாறு கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சாலையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி. வி. காமிரா காட்சிகள் பதிவை வைத்து இளம்பெண் கடத்தி நகை அல்லது கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்ற அடிப்படையில் தீவிர விசாரனை மேற்கொண்டனர் .

மேலும் வைஜெயந்தி பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த எண்ணில் இருந்து கடைசியாக சிவகங்கை மாவட்டம் பீஷர் பட்டணம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் கருப்பையா பேசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அழைத்து போலீசார் விசாரித்தனர் இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

வைஜெயந்தி கட்டிட சித்தாளாக வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது கருப்பையா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார், கொத்தனாரான அவர் வைஜெயந்திக்கு தொடர்ந்து வேலை கொடுத்ததால் அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும் கள்ளக்காதலை வளர்க்க கருப்பையா வைஜெயந்திக்கு புதிதாக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கருப்பையா போன் செய்யும் போதெல்லாம் வைஜெயந்தியின் செல்போன் எண் பிசியாக இருந்துள்ளது. தான்வாங்கி கொடுத்த செல்போனில் தன்னை விட்டுவிட்டு வேறுயாரிடமோ பேசுவதாக கருப்பையாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இனிமேலும் அவரை விட்டு வைத்தால் அவர் நம்மை விட்டு சென்றுவிடுவார் என்ற அச்சம் ஏற்பட்டது.

எனவே வைஜெயந்தியை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்த கருப்பையா, தனது கூட்டாளியான மதுரை சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் உதவியை நாடினார். இருவரும் திட்டம் வகுத்து சம்பவத்தன்று இரவு வைஜெயந்தியை உல்லாசம் அனுபவிக்கலாம் வா என்று கூறி வைகை ஆற்றுப்பகுதிக்கு கருப்பையா வரவழைத்துள்ளார். பின்னர் அவரை தனிமையில் அழைத்து சென்றபோதுதான் அங்கு ஜெயகாந்தன் இருப்பதை வைஜெயந்தி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் கேட்டபோது, உன்னை கொலை செய்யப் போகிறோம் என்று இருவரும் கூறியுள்ளனர். பேசிக்கொண்டு இருக்கும் போதே வைஜெயந்தியை இருவரும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்தநிலையில்தான் தனிப்படை போலீசாரின் புலன் விசாரணையில் கருப்பையா. ஜெயகாந்தன் இருவரும் சிக்கிக்கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலுக்கு ஆசைப்பட்டு இளம்பெண் உயிரை விட்ட சம்பவம் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்