மாணவர்களுக்கு பாராட்டு விழா: த.வெ.க. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வரும் 28-ம் மற்றும் ஜூலை 3-ம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது.

Update: 2024-06-26 11:41 GMT

சென்னை,

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது. பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிலையில் விழாவுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேப்பர்,பேனா கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. விழாவில் மாணவர்களுடன் பெற்றோர், உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்