விஜய், சீமான் ஆகியோரால் உரசிப் பார்க்க இயலாத இரும்பு இயக்கம் தி.மு.க - அமைச்சர் கோவி.செழியன்

தமிழகத்தை ராமர் பூமியா? அல்லது ராமசாமி பூமியா? எனக்கேட்டால் நாங்கள் ராமசாமி பூமி என்றுதான் சொல்வோம் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.;

Update:2024-12-12 00:25 IST

சென்னை,

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சுதர்சனம், திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் ஆகியோர் இதில் பங்கேற்றனர். விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:-

விஜய், சீமான் ஆகியோரால் உரசிப் பார்க்க இயலாத இரும்பு இயக்கமாக தி.மு.க. இருந்து வருகிறது. தமிழகத்தை ராமர் பூமியா? அல்லது ராமசாமி பூமியா? எனக்கேட்டால் நாங்கள் ராமசாமி பூமி என்றுதான் சொல்வோம். இங்கு ராமருக்கு இடமில்லை. அதற்கு சாட்சியாகத்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 என தமிழகத்தில் வெற்றி பெற்றோம்.

அம்பேத்கர் படத்துக்கு ஒரு நாள் பூ போட்டு, போஸ் கொடுத்து விட்டால் விஜய் என்ன வாழும் அம்பேத்கரா? அம்பேத்கர் பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, ஒரு ரூபாய் நாணயத்தில் அம்பேத்கரின் படத்தை பொறிக்க அரும்பாடுபட்டவர் கருணாநிதிதான். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சரின் மகன், கருணாநிதியின் பேரன் என்பதையும் தாண்டி, தற்போது சனாதனத்தை எதிர்க்கும் மாபெரும் சக்தியாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்