திருப்பத்தூர்: கிணற்றில் விழுந்த 13 காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கிணற்றில் விழுந்த 13 காட்டுப்பன்றிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன சமுத்திரம் அருகே காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி விவசாய நிலத்திற்குள் புகுந்த 13 காட்டுப்பன்றிகள், அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், வலைகள் மற்றும் கயிறுகள் மூலம் கிணற்றுக்குள் இருந்து அனைத்து காட்டுப்பன்றிகளையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த காட்டுப்பன்றிகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.