கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வா? - அமைச்சர் கோவி.செழியன் பதில்

பேராசிரியர்கள் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.

Update: 2024-12-12 02:40 GMT

கோப்புப்படம் 

சென்னை,

முதல்-அமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் 69 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் அதற்கான ஆணைகளையும், 2 பேருக்கு பாரதி இளங்கவிஞர் விருது மற்றும் தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையையும் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்கக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, விருது வழங்கினார். இதனைத் தொடந்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த உயர்கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்திலும் அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

புதிய பாடத்திருத்தம், பாடப்பிரிவு மாற்றம் கோரி வந்த மனுக்களை ஆராய்ந்து முடிவெடுப்போம். வரும் கல்வியாண்டில் அர்த்தமுடைய, பயனுடைய பாடப்பிரிவுகள் இணைக்கப்பட்டு, உயர்கல்வியை உச்சத்தை அடைய வைக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் எண்ணத்தை உயர்கல்வித்துறை நிறைவேற்றும்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் நல்ல முடிவு எடுப்போம். பேராசிரியர்கள் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும். கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு என்ற முடிவை தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை. புதிய கருத்துகள் வேண்டாம். கட்டணச் சுமை இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதுபற்றி பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்