அ.தி.மு.க.வினர் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

Update: 2024-06-26 14:08 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்ததில் 58 போ் உயிாிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. இதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.க.வினர் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்