நாகர்கோவிலில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

நாகர்கோவிலில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-06 21:11 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் சகோதரர் தெருவை சேர்ந்தவர் சுப்பையாபிள்ளை (வயது 87). இவர் அப்பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வந்ததாகவும், அந்த கடையை அகற்றுமாறு சிலர் கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சுப்பையாபிள்ளை வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவருடைய மனைவி வள்ளி அம்மாள் கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சுப்பையாபிள்ளையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்