செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-06-29 10:00 GMT

சென்னை,

* கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டசபையில் மசோதா நிறைவேறியது.

* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதற்கு அரசுக்கு விருப்பம் இருந்தாலும், ஆனால் அதற்கான சூழல் இல்லை என்று என சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

* நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

* சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

* சீனா செல்ல வேண்டாம் என தன் நாட்டவருக்கு தைவான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* லடாக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

* பாகிஸ்தானில் வெயிலுக்கு பலி எண்ணிக்கை 550-ஐ தாண்டியது.

* கோவையில் மதுகுடித்த 2 பேருக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

* தெலுங்கானாவில் கண்ணாடி தொழிற்சாலையில் வெடிவிபத்து; 5 பேர் பலி மற்றும் 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

* தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய மகளிர் அணி.

* கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பராகுவேவை வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்