தமிழ்நாட்டில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-07-01 08:55 GMT

சென்னை,

முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

தமிழக அரசின் மருத்துவத் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா, இந்து அறநிலையத்துறை மற்றும் கலாசாரத் துறை முதன்மைச் செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக கே.மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூகப் பாதுகாப்புத் திட்டச் செயலாளராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுப் பணித்துறை செயலாளராக மங்கத் ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்வளத்துறை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா, செய்தி மற்றும் காகிதத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வனத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை செயலாளராக செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் இயக்குநராக விஜயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக வெங்கடாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நில சீர்திருத்த ஆணையராக ஹரிஹரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்