செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-07-01 10:30 GMT

சென்னை,

* பிரதமர் மோடியோ, பா.ஜனதாவோ இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல - ராகுல்காந்தி பேச்சால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.

* மாநில கல்வி கொள்கை தொடர்பான 650 பக்க அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

* புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மூலம் விரைவாக நீதி கிடைக்கும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

* நீட் குறித்து பேச அனுமதி மறுத்ததால் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்றார்.

* இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க்கை வீழ்த்தி ஜெர்மனி காலிறுதிக்கு தகுதி பெற்றது. அதுபோல சுலோவாக்கியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.

* போர்ப்பதற்றம்: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தி உள்ளது.

* வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.

* தமிழ்நாட்டில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* விராட் மற்றும் ரோகித் இன்னும் 2 ஐ.சி.சி. தொடர்களில் விளையாடுவார்கள் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்