கோவையில் மதுகுடித்த 2 பேருக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரும் கள்ளச்சாராயம் குடித்ததாக வதந்தி பரவியது.

Update: 2024-06-29 08:33 GMT

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் மகேந்திரன், ரவி. இவர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர்.

இதில், இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரும் கள்ளச்சாராயம் குடித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து கோவை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் கள்ளச்சாராயம் குடித்ததாக பரவிய தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தியது கள்ளச்சாராயம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்று மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்