டிரைவர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. இந்த கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்துக்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் தென்னையன் (39) என்பவர் அடிக்கடி சாப்பிட வந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வரும் போது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை சாதகமாக்கி அவர் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த தென்னையனை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று நெகமம் அருகே பதுங்கி இருந்த லாரி டிரைவர் தென்னையனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாலகிருஷ்ணன் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.