கமல்ஹாசனுடன் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு சந்திப்பு

கமல்ஹாசனை இன்று தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து பேசினார்.

Update: 2024-06-18 16:26 GMT

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் 8-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசனை, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ததற்காக கமல்ஹாசனுக்கு டி.ஆர்.பாலு நன்றி தெரிவித்ததாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, தி.மு.க. தலைமை நிலையச் செயலாளார் பூச்சி முருகன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்