சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா - மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு

நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-01 05:33 GMT

கோப்புப்படம் 

சென்னை,

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி வளாகம் போன்ற இடங்களில் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் மொத்த பரிசோதனையின் முடிவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் பரிசோதனைகளை அதிகரிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்