தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரிய வழக்கு; அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு கிளை

தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரிய வழக்கில் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.

Update: 2023-10-19 16:27 GMT

மதுரை,

தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை முறையாக கடைப்பிடிக்காதது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நாம் வாழ்ந்து வரும் உலகமயமாக்கல் காலத்தில் இந்த உத்தரவு நடைமுறை சாத்தியமா என்பது தெரியவில்லை என்றனர்.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோர்ட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்