'பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார்' - எல்.முருகன்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-18 16:44 GMT

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தமிழகத்தில் பா.ஜ.க. அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. பா.ஜ.க.வின் மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வருகிறார், அவரைப் பற்றி தேவையில்லாமல் எதுவும் கேட்க வேண்டாம். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி களம் இறங்குவது எதிர்பார்த்த ஒன்று தான், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை."

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்