செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருட்டு

செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருட்டு

Update: 2023-04-11 19:57 GMT

தஞ்சை மாவட்டத்தில் செல்போன் கோபுரங் களில் பேட்டரி திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனிப்படையினர் தீவிர விசாரணை

தஞ்சை மாவட்டத்தில் செல்போன் கோபுரத்தில் பேட்டரி மற்றும் மின்னணு சாதனங்கள் தொடர்ந்து திருடு போவதாக புகார் வந்தன. இதையடுத்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயசந்திரன் உத்தரவின்படி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் அடைக்கலஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், கந்தசாமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினரின் தீவிர விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.

6 பேர் கைது

இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பட்டுக்கோட்டை தாலுகா சீதாம்பாள்புரத்தை சேர்ந்த சாமிநாதன் (வயது28), பூவாளூரை சேர்ந்த காளிதாஸ் (26), சீதம்பாள்புரத்தை சேர்ந்த கமலக்கண்ணன், (29), மனவயலை சேர்ந்த மாணிக்கராஜ் (29), கொண்டிகுளத்தை சேர்ந்த தமிழ்வாணன் (33), குறிச்சியை சேர்ந்த பிரகாஷ் (22) ஆகியோர் என்பதும், அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 5 ேகாபுரங்களில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான பேட்டரி பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கார் மற்றும் நம்பர்பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து பேராவூரணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்