தேனி தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் மனு

தேனி தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்

Update: 2022-06-28 14:04 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அன்னஞ்சி கிளை செயலாளர் அப்பாஸ் மந்திரி, கோபாலபுரம் கிளை செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் தலைமையில், அன்னஞ்சி, கோபாலபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் தேனி தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். மேலும், மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ் மற்றும் அக்கட்சியை சேர்ந்த சிலரும் அவர்களுடன் வந்தனர்.

இரு கிராமங்களிலும் அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குமாறு அவர்கள் மனு கொடுக்க சென்றனர். அப்போது அங்கு இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த மக்கள் வசிக்கும் இடங்களின் விவரங்களை கேட்டறிந்தனர். அதில், அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு மட்டும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தனிநபர்களுக்கு கிரையம் செய்யப்பட்ட இடங்களுக்கு பட்டா வழங்க இயலாது என்றும் கூறினர். இதையடுத்து இருகிராமங்களையும் சேர்ந்த மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்