சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த யூடியூபருக்கு ஜாமீன்

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த யூடியூபருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.

Update: 2024-07-16 19:56 GMT

மும்பை,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பன்வாரிலால் குஜ்ஜார். இவர் நடிகர் சல்மான் கானை கொல்லப்போவதாக மிரட்டி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டிருந்ததாக கூறப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்வாரிலால் குஜ்ஜார் மீது கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி பன்வாரிலால் குஜ்ஜார் மும்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் "பொழுதுபோக்கிற்காகவும், புகழ் பெறுவதற்காகவும் வீடியோக்களை உருவாக்கி எனது சேனலில் பதிவேற்றினேன்.

அந்த பதிவில் எந்த இடத்திலும் சல்மான் கானை கொல்லப்போவதாக தான் குறிப்பிடவில்லை" என கூறியிருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி யூடியூபர் பன்வாரிலால் குஜ்ஜாரை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்