உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Update: 2024-09-16 19:12 GMT

சோன்பத்ரா,

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையால் சோன்பத்ராவில் ஒரு மலையோர பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சரிந்த பாறை மற்றும் மணல் அருகில் உள்ள தண்டவாளத்தில் மூடிக்கிடந்துள்ளது.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் சுனார்-சோபன் பகுதிக்கு இடையே வந்த ஒரு சரக்கு ரெயில், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மண்பாறை குவியலில் எதிர்பாராதவிதமாக மோதி தடம்புரண்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்தால் அந்த தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி, சரக்கு ரெயிலை பழுதுநீக்கி அனுப்பும் வரை சில ரெயில்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.

 

Tags:    

மேலும் செய்திகள்