ஜனநாயகத்தின் தாய் இந்தியா - பிரதமர் மோடி
ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி,
இந்திய அரசியலமைப்பு சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சாசனம் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற விவாதத்தில் அரசியலமைப்பு சாசனம் குறித்து எம்.பி.க்கள் பேசினர்.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் இன்று நடைபெற்ற அரசியல் சாசன விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, அரசியலமைப்பு சாசனம் உருவாவதில் பெண்களின் முன்னேற்றம் முக்கிய பங்காற்றியுள்ளது. அரசியலமைப்பில் பெண்களுக்கு முதலில் அதிகாரம் வழங்கியது இந்தியாதான்.
ஆயிரம் ஆண்டுகால ஜனநாயக பாரம்பரியத்தை கொண்டுள்ளதால் இந்தியா மிகப்பெரிய ஜனநாயகநாடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் ஆகும்.
அரசியலமைப்பு சாசனம் கொண்டுவரப்பட்டு 75 ஆவதை கொண்டாடும் நேரம் இது. இந்த கொண்டாட்டத்தில் நாடாளுமன்றமும் பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டின் ஜனநாயக பாரம்பரியம் மீது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்துள்ளனர்.
பல நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமையை மிகவும் காலதாமதமாக வழங்கின. ஆனால் இந்தியாவில் அரசியலமைப்பு சாசனம் ஆரம்பத்திலேயே பெண்களுக்கு இந்த உரிமையை வழங்கியது. அரசியலமைப்பு சாசனம் உருவாவதில் பெண்கள் முன்னேற்றம் மிகப்பெரிய
அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியதாகவே உள்ளது. நாடாளுமன்றம், மந்திரி சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகாலத்தில் எங்கள் அரசின் கொள்கைகள், முடிவுகள் அனைத்தும் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளன' என்றார்.