டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல், இந்த வாரத்தில் 3வது சம்பவம்

டெல்லியில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-12-14 06:37 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீப நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று டெல்லி டிபிஎஸ் ஆர்கே புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாரத்தில் டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது இது 3வது முறையாகும்.

வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக காலை 6:09 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறை, உள்ளூர் போலீஸார், நாய்ப் படைகள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுக்கள் பள்ளிக்கு வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த பள்ளியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, நேற்று டெல்லியில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல கடந்த 9ம் தேதி குறைந்தபட்சம் 44 பள்ளிகளுக்கு இதே போன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு அந்த மிரட்டல்கள் புரளி என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்