கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்

அதிர்ஷ்டவசமாக கார் ஆற்றின் கரையோரம் இருந்த மரத்தில் சிக்கியது.

Update: 2024-07-01 17:27 GMT

காசர்கோடு,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இரு இளைஞர்கள் கூகுள் மேப் உதவியுடன் காரில் சென்றுகொண்இருந்தனர். அவர்கள் அண்டை மாநிலமாக கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பக்கவாட்டு சுவர்கள் இல்லாத பாலம் ஒன்று நீரில் மூழ்கியது. எனினும் இதனை கவனிக்காத அந்த இளைஞர்கள், கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றவாறு ஆற்றுக்குள் காரை விட்டனர். பாலம் என நினைத்து இளைஞர்கள் காரை ஆற்றுக்குள் விட்டனர்.

இதனால் ஆற்று வெள்ளத்தில் சிறுது தூரம் கார் அடித்துச்செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக கார் ஆற்றின் கரையோரம் இருந்த மரத்தில் சிக்கியது. இதனால் இரண்டு இளைஞர்களும் எப்படியோ காரின் கதவைத் திறந்து வாகனத்தை விட்டு வெளியே வந்தனர். பின்னர், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் கயிறுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டனர். தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காருடன் ஆற்றுக்குள் இளைஞர்கள் சிக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்