தேசிய மருத்துவ ஆணைய தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமனம்

தேசிய மருத்துவ ஆணையம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது.;

Update:2024-07-03 23:33 IST

புதுடெல்லி,

நாட்டில் செயல்பட்டு வரும் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தன்னாட்சி வாரியத்தின் பல்வேறு பதவிகளுக்கான ஆட்களை, மந்திரிசபையின் நியமன கமிட்டி நியமனம் செய்துள்ளது. இதன்படி, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுபற்றிய அறிவிப்பை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது. பணியமர்த்தப்பட்ட நபர்கள் 4 ஆண்டுகள் பணி நியமனத்தின்படி, அந்நபர் 70 வயது நிறைவடையும் வரை அல்லது அடுத்த உத்தரவு வெளிவரும் வரை, இதில் எது முன்பே வருமோ அதுவரை அவர்கள் பதவியில் நீடிக்க முடியும்.

தேசிய மருத்துவ ஆணையம் ஆனது, நாட்டில் தரம் வாய்ந்த மருத்துவ கல்வி கிடைப்பதற்கான வழிகளை மேம்படுத்துவது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிக தரமிக்க மருத்துவ அதிகாரிகள் போதிய அளவில் இருக்கிறார்கள் என உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இந்த ஆணையம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. இதன் இடைக்கால தலைவராக டாக்டர் கங்காதர் இருந்து வந்த நிலையில், அவர் முறைப்படி தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்