சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம்

சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று ஆம் ஆத்மி மாநில இளைஞரணி செயலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-14 16:56 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூருவில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் முகந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியிலும், கர்நாடக மாநிலத்திலும் பா.ஜனதா கட்சி இரட்டை என்ஜின் ஆட்சி நடந்து வருகிறது. இதனால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மக்களை நல்வழிப்படுத்தவேண்டிய மாநில அரசு மற்றும் எம்.எல்.ஏக்கள், கட்சி தலைவர்கள் இளைஞர்களிடையே மத உணர்வை தூண்டி அவர்களை கலவரத்தில் ஈடுபடுத்துகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். இளைஞர்களை சிந்தனைவாதிகளாக மாற்றவேண்டும். அதைதான் ஆம் ஆத்மி கட்சி செய்ய இருக்கிறது. இளைஞர்களை சரியான பாதைகளில் அழைத்து சென்று கொண்டிருக்கிறோம். இதனால் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் ஆம் ஆத்மி ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக உருவாகும். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்