அயோத்தியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்து செல்வோம்-யோகி ஆதித்யநாத்

அயோத்தியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு பாஜக எடுத்து செல்லும் என்று உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Update: 2023-05-09 09:34 GMT

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் நகபுற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 2 வது கட்ட தேர்தல் வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 760 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அயோத்தியும் ஒன்றாகும். அயோத்தியில் பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கிரிஷ் பதி திரிபாதிக்கு ஆதரவாக அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, யோகி ஆதித்யாத் கூறியதாவது:-

அயோத்தி நம்முடையது. அயோத்தி வளர்ச்சிக்கான கூட்டு பொறுப்பு நமக்கு இருக்கிறது. வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு அயோத்தியை நாங்கள் எடுத்து செல்வோம். ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக ஒரு வலுவான குழு அமைவது கண்டிப்பாக அமைய வேண்டும். ஏனெனில் அயோத்தியை இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் கவனிக்கிறார்கள்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்