சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை 23-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு எதிராக சவுக்கு சங்கர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

Update: 2024-09-20 21:05 GMT

புதுடெல்லி,

பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் கஞ்சா வைத்திருந்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் ஆஜரான வக்கீல் பாலாஜி சீனிவாசன், இந்த மனு குறித்து முறையிட்டார். தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (அதாவது இன்று) தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை வருகிற 23-ந் தேதி தள்ளிவைப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்