டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாப சாவு

தார்வாரில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-11-20 18:45 GMT

உப்பள்ளி:-

தார்வார் டவுனை சேர்ந்தவர் மகேஷ் (வயது 60). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் உப்பள்ளியில் இருந்து தார்வாருக்கு டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தார்வார் அருகே சத்தூர் பகுதியில் வந்தபோது, திடீரென்று டிராக்டரின் டயர் வெடித்தது. இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், தாறுமாறாக ஓடி சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் மகேஷ், இடிபாடுகளிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தார்வார் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பலியான மகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வத்தனர். இதுகுறித்து தார்வார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்