விளையாடிக்கொண்டிருந்தபோது கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
விளையாடிக்கொண்டிருந்தபோது கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் லஹம்பூர் கிராமத்தில் பேக்கரி உள்ளது. அந்த பேக்கரியின் உரிமையாளர் தனது 6 வயது மகளான வைஷ்னவியை கடந்த 30-ம் தேதி பேக்கரிக்கு அழைத்து வந்துள்ளார்.
சிறுமி வைஷ்னவி பேக்கரியின் சமையல் அறையில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, நிலைதடுமாறி சமையல் அறையில் இருந்த கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் சிறுமி விழுந்தார்.
இதில், படுகாயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.