பாஜக- சிவசேனா இடையே தொடரும் மோதல் - இரு கட்சிகளும் மாறிமாறி போஸ்டா் ஒட்டியதால் பரபரப்பு

மராட்டியத்தில் உள்ள அவுரங்காபாத்தில் பாஜக, சிவசேனா கட்சிகள் மாறி மாறி போஸ்டா் ஒட்டி இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-22 13:00 GMT

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் நிலவும் குடிநீா் பிரச்சனை சம்பந்தமாக வருகின்ற திங்களன்று பாஜக சாா்பாக பேரணி நடத்தப்பட உள்ளது. அதுதொடா்பான பேனா்களை பாஜக வினா் வைத்துள்ளனா். இந்த நிலையில், எரிபொருள் மற்றும் சிலிண்டா் விலைகள் குறித்த பேனா்களை சிவசேனா கட்சியினா் அந்த பகுதியில் வைத்துள்ளனா்.

பேனாில் சாதாரண குடும்பங்களின் துயர் நீக்குவதற்காக எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் எனவும், மராத்வாடா நகரில் குடிநீா் வரியை பாதியாகக் குறைத்துள்ளதாகவும் அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்