காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.7¼ லட்சம் பறிமுதல்

உப்பள்ளியில் காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.7¼ லட்சம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-04-16 18:45 GMT

உப்பள்ளி-

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் உப்பள்ளி புறநகர் கப்பூர் பைபாஸ் சோதனை சாவடியில் உப்பள்ளி தாசில்தார் கலகவுடா தலைமையில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹாவேரியில் உப்பள்ளியை நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.7.37 லட்சம் இருந்தது.

இதுதொடர்பாக காரில் இருந்த ஹாவேரியை சேர்ந்த செரீப், முகமது பெப்பாரி என்பவரிடம் போலீசார் கேட்டனர். அதில் அவர்கள் ரூ.7.37 லட்சம் ரொக்கத்திற்கான ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரூ.7.37 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். ஆவணங்களை காண்பித்து பணத்தை வாங்கி விட்டு செல்லும் படி போலீசார் கூறினர். பின்னர் ரூ.7.37 லட்சம் ரொக்கத்தை, உப்பள்ளி தாசில்தார் கலகவுடா தார்வார் மாவட்ட தேர்தல் அதிகாரி அசோக்கிடம், ஒப்படைத்தனர். இதுகுறித்து உப்பள்ளி தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்