உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது:
உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் கைதுசெய்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மைன்புரியில் 25 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் செவ்வாய்கிழமை நடந்ததாக தெரிவித்த போலீசார், குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மெயின்புரி எஸ்பி கூறுகையில், "தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினோம். குற்றவாளி கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.