உம்மன் சாண்டி விருதுக்கு ராகுல்காந்தி தேர்வு

முதல் ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் தலைவர், ராகுல்காந்தியின் பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2024-07-22 03:28 GMT

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவரும், கேரள முன்னாள் முதல் மந்திரியுமான உம்மன் சாண்டி, இறந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி அவரது பெயரில் நிறுவப்பட்டுள்ள உம்மன் சாண்டி பவுண்டேசன் சார்பில், பொது சேவை விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி முதல் ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் தலைவர், ராகுல்காந்தியின் பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த பரிசு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், விருதுச் சிற்பமும் கொண்டதாகும். சசிதரூர் எம்.பி. தலைமையிலான குழு, பரிசுக்கு தகுதியானவர்களை பரிசீலித்து தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ராகுல்காந்தி நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரை உள்ளிட்ட சேவைகளுக்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்