பெங்களூருவில் இன்றும், நாளையும் மின்தடை- பெஸ்காம் தகவல்

பெங்களூருவில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-04 18:45 GMT

பெங்களூரு: பெங்களூருவில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என பெங்களூரு மின்வாரியம்(பெஸ்காம்) சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பெஸ்காம் கூறியதாவது:-

பெங்களூருவில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பெங்களூருவில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும். அதன்படி டி.கே.ஹள்ளி, அக்ரஹாரா பீடர்ஸ், மல்லேசுவரம், தேவிநகர், இஸ்ரோ, எல்.ஜி.ஹள்ளி, சஞ்சய் நகர், ஆதார் பில்டிங் மற்றும் சிக்கமாரனஹள்ளி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இதேபோல் சோமனஹள்ளி, ராமநகர் மற்றும் கோலார் மண்டலம், சிக்பள்ளாப்பூர் துணை மின்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அமலில் இருக்கும்.

இவ்வாறு பெஸ்காம் சார்பில் கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்