துவாரகா சங்கராச்சாரியார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

துவாரகா சங்கராச்சாரியார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-12 00:27 GMT

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சொரூபானந்த சரஸ்வதி காலமானார். அவருக்கு வயது 98. நரசிங்பூர் மாவட்டம் ஜோதேஷ்வர் தாமில் உள்ள அவரது ஆசிரமத்தில் அவர் மறைந்தார். உயிர் பிரிந்தபோது, அவரை சுற்றி சீடர்கள் நின்றிருந்தனர்.

சங்கராச்சாரியார் மறைந்த செய்தியை அறிந்தவுடன், ஆசிரமத்துக்கு திரண்டு வந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சங்கராச்சாரியார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "துவாரகா சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த சரஸ்வதியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி!" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்