கர்நாடகத்தில் புதிதாக கொரோனா பலி இல்லை

கர்நாடகத்தில் புதிதாக கொரோனா பலி இல்லை.

Update: 2022-11-23 21:43 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 5,420 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 61 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரில் 41 பேர், பெலகாவி, ஹாசன், கோலாரில் தலா 3 பேர், பல்லாரி, தட்சிண கன்னடா, தாவணகெரே, தார்வார், ஹாவேரி, கலபுரகி, குடகு, மண்டியா, மைசூரு, உடுப்பி, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று புதிதாக கொரோனா பலி இல்லை. 1,536 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். நேற்று 69 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 40 லட்சத்து 29 ஆயிரத்து 91 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 40 லட்சத்து 70 ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 260 பேர் உயிரிழந்து உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்