இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 7 சதவீதமாக இருக்கும் 'மூடிஸ்' நிறுவனம் கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என்று கடந்த செப்டம்பர் மாதம் ‘மூடிஸ்’ முதலீட்டாளர் சேவை நிறுவனம் கணிப்பு வெளியிட்டது.

Update: 2022-11-11 23:45 GMT

புதுடெல்லி,இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 'மூடிஸ்' முதலீட்டாளர் சேவை நிறுவனம் கணிப்பு வெளியிட்டது.

நடப்பு ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 'மூடிஸ்' முதலீட்டாளர் சேவை நிறுவனம் கணிப்பு வெளியிட்டது. ஆனால் நேற்று தனது கணிப்பை குறைத்துக் கொண்டது. அதன்படி, பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. கடந்த மே மாதம், 8.8 சதவீதத்தில் இருந்து கணிப்பை 7.7 சதவீதமாக குறைத்தது. இதன்மூலம், 2-வது தடவையாக 'மூடிஸ்' தனது கணிப்பை குறைத்துள்ளது. பணவீக்க உயர்வு, கடனுக்கான வட்டி உயர்வு, உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகியவையே இதற்கு காரணங்கள் என்று 'மூடிஸ்' கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்