eaஇமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மிதமான நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் கின்னவுர் மாவட்டத்தில் 5 கி.மீ ஆழத்தில் இருந்ததாகவும், இது இன்று மதியம் 12.02 மணியளவில் மாவட்டத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நில அதிர்வாக உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.