தெலுங்கானா வெள்ள பாதிப்பு: நடிகர் மகேஷ் பாபு ரூ.60 லட்சம் நன்கொடை

நடிகர் மகேஷ் பாபு தெலுங்கானா வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்காக ரூ.60 லட்சம் நன்கொடை வழங்கி இருக்கிறார்.;

Update:2024-09-23 15:35 IST

ஐதராபாத்,

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் கனமழை கொட்டியது. தொடர்ந்து பெய்த மழையால், முக்கிய சாலைகளை வெள்ளம் மூழ்கடித்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது நடிகர் மகேஷ் பாபுவும் ரூ.60 லட்சம் நன்கொடை வழங்கி இருக்கிறார்.

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை, நடிகர் மகேஷ் பாபு மற்றும் அவரது மனைவி இன்று நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது தெலுங்கானா வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்காக ரூ.50 லட்சத்திற்கான காசோலையும், ஏ.எம்.பி சினிமாஸ் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு மகேஷ் பாபு வழங்கினார்.

நடிகர் மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் தற்காலிகமாக 'எஸ்.எஸ்.எம்.பி 29' என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்