மாண்டஸ் புயல்: ஈ.சி.ஆர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் சேவை நிறுத்தம் - புதுச்சேரி போக்குவரத்து கழகம்

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-12-09 08:16 GMT

புதுச்சேரி,

வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை மற்றும் காரைக்காலுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதாகவும், புயல் கரையை கடந்த பிறகு பஸ்கள் இயக்கப்படும் என புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்