கவர்னரை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் சட்ட மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்

கவர்னரை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் சட்ட மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

Update: 2022-11-09 07:14 GMT

திருவனந்தப்புரம்,

கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். கவர்னர் அதிகாரத்தை குறைக்க வேண்டும். கவர்னருக்கு பதிலாக நிபுணரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க வேண்டும். இவ்வாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலை மையிலான இடதுசாரி அரசு முடிவு செய்துள்ளநிலையில்,

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் அவசர சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. துணை வேந்தர்கள் நியமனங்கள் தொடர்பாக கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்