ஜார்க்கண்ட் முதல்-மந்திரியின் உதவியாளர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு - ரூ. 5.32 கோடி பறிமுதல்

ஜார்க்கண்ட் முதல்-மந்திரியின் அரசியல் உதவியாளர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.5.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-10 03:22 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா. மாநிலத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை ஒப்பந்தத்தில் விடுவதில் ஊழல் நடைபெற்றதாகவும், இதில் பங்கஜ் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் பணமோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சஹிப்கஞ்ச் மாவட்டத்தில் பங்கஜ் மிஸ்ராவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பங்கஜ் மிஸ்ராவின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 18 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை நேற்று வரை நீடித்தது.

இந்த சோதனையில் பங்கஜ் மிஸ்ராவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத 5 கோடியே 32 லட்ச ரூபாயை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்